• Feb 15 2026

நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை

Aathira / Jan 17th 2026, 8:06 am
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், அதேபோல் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் பொதுவாக சீரான வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது. 

கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், அதேபோல் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில், காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டரை விட அதிகமாக வீசக்கூடும்.

இதனால், இக்கடல் பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில், நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், அதேபோல் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் பொதுவாக சீரான வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது. கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், அதேபோல் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில், காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டரை விட அதிகமாக வீசக்கூடும்.இதனால், இக்கடல் பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement