நாட்டின் தற்போதைய சிறுபோக நெல் அறுவடையை விவசாயிகளிடமிருந்து எந்தவித தடையுமின்றி, அரசாங்கம் நிர்ணயித்த நியாயமான விலையில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்முதல் செய்வதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு அரசாங்கத்தின் நிலையான விலையை உறுதிப்படுத்துவதுடன், சிறு அரிசி ஆலை உரிமையாளர்களை வலுப்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யும் வகையில், சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வட்டி இல்லாத கடன் வசதியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கடன் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்காக 109 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபாய் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் இதுவரை இந்த நிவாரணக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், ஒரு அரிசி ஆலை உரிமையாளருக்கு அதிகபட்சமாக 20.5 மில்லியன் ரூபாய் வரை நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்த சிறுபோகத்தில் மொத்தமாக 830 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
மேலும், அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையான விலையின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யுமாறு அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு மற்றும் சிவப்பு நாடு நெல் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாயும், சம்பா நெல் கிலோ ஒன்றுக்கு 130 ரூபாயும் என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சிறுபோகத்திலும் அரசாங்கத்தினால் 1,800 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக 2,500 மெட்ரிக் தொன் நெல்லை கொள்முதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிவாரணக் கடன் திட்டத்தின் மூலம் வவுனியா மாவட்ட விவசாயிகள் தங்களது நெல் அறுவடைக்கு உரிய நியாயமான விலையை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இடைத்தரகர்கள் மற்றும் அரிசி மாஃபியாக்களின் தலையீட்டை குறைத்து, நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விநியோகிப்பதற்கும் இந்த திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் என். கமலதாசன், சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வவுனியா விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலை – அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வட்டி இல்லா கடன் நாட்டின் தற்போதைய சிறுபோக நெல் அறுவடையை விவசாயிகளிடமிருந்து எந்தவித தடையுமின்றி, அரசாங்கம் நிர்ணயித்த நியாயமான விலையில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன் ஒரு பகுதியாக, வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்முதல் செய்வதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு அரசாங்கத்தின் நிலையான விலையை உறுதிப்படுத்துவதுடன், சிறு அரிசி ஆலை உரிமையாளர்களை வலுப்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இதற்காக விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யும் வகையில், சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வட்டி இல்லாத கடன் வசதியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த கடன் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்காக 109 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபாய் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் இதுவரை இந்த நிவாரணக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.அவர்களுக்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இந்த திட்டத்தின் கீழ், ஒரு அரிசி ஆலை உரிமையாளருக்கு அதிகபட்சமாக 20.5 மில்லியன் ரூபாய் வரை நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், இந்த சிறுபோகத்தில் மொத்தமாக 830 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது.மேலும், அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையான விலையின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யுமாறு அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, நாடு மற்றும் சிவப்பு நாடு நெல் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாயும், சம்பா நெல் கிலோ ஒன்றுக்கு 130 ரூபாயும் என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சிறுபோகத்திலும் அரசாங்கத்தினால் 1,800 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், 2026ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக 2,500 மெட்ரிக் தொன் நெல்லை கொள்முதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த நிவாரணக் கடன் திட்டத்தின் மூலம் வவுனியா மாவட்ட விவசாயிகள் தங்களது நெல் அறுவடைக்கு உரிய நியாயமான விலையை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேவேளை, இடைத்தரகர்கள் மற்றும் அரிசி மாஃபியாக்களின் தலையீட்டை குறைத்து, நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விநியோகிப்பதற்கும் இந்த திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் என். கமலதாசன், சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.