• May 23 2026

வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்; உலக உணவு தினத்தை முன்னிட்டு யாழில் முன்னெடுப்பு!

shanu / Oct 30th 2025, 7:13 pm
image

உலக உணவு தினத்தை முன்னிட்டு இரசாயனப் பாவைனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் இன்று இடம்பெற்றுள்ளது. 


உலக உணவு தினம் யாழ்ப்பாணம் பிரதான வீதி மாட்டினார் வீதி குருமட முன்பாக  இன்று காலை இடம்பெற்றது. 


யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 


உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் குறித்த கண்காட்சியும் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


மரக்கறி வகைகள், பழவகைப் பானங்கள், பனம் உற்பத்திப் பொருள்கள், மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்டன இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. 


இதன்போது பலரும் அங்கு சென்று உள்ளூர் உற்பத்திப் பொருள்களைப் பார்வையிட்டு வாங்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்; உலக உணவு தினத்தை முன்னிட்டு யாழில் முன்னெடுப்பு உலக உணவு தினத்தை முன்னிட்டு இரசாயனப் பாவைனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் இன்று இடம்பெற்றுள்ளது. உலக உணவு தினம் யாழ்ப்பாணம் பிரதான வீதி மாட்டினார் வீதி குருமட முன்பாக  இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் குறித்த கண்காட்சியும் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மரக்கறி வகைகள், பழவகைப் பானங்கள், பனம் உற்பத்திப் பொருள்கள், மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்டன இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இதன்போது பலரும் அங்கு சென்று உள்ளூர் உற்பத்திப் பொருள்களைப் பார்வையிட்டு வாங்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement