• Jun 30 2025

செம்மணியில் இன்றும் பல குழந்தைகளின் எலும்புக்கூடுகள்; பை மற்றும் துணித்துண்டும் மீட்பு! மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு வந்த குழு!

Chithra / Jun 29th 2025, 4:05 pm
image



செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

நான்காம் அகழ்வுப் பணி இன்று நடைபெற்ற நிலையில் பல குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மண்மாதிரிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பிரத்தியேக குழுவொன்று இன்று  வந்துள்ளது.

மனிதப்புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண்மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக, சட்ட மருத்துவ அதிகாரிகளால் விண்ணப்பம் நீதிமன்றத்துக்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பத்துக்கு நீதிமன்றம் முறையான அனுமதிகளை வழங்கியதைத் தொடர்ந்தே, மண் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக கொழும்பிலிருந்து குறித்த குழு வருகைதந்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.

இதைவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் பீட பேராசிரியர்களும் கார்பன் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். 

அத்துடன், செய்மதிப் படங்கள் மூலமும், ட்ரோன் மூலமும் மேற்கொண்ட ஆய்விலும் தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு அருகாகவும் புதைகுழிகள் இருக்கலாம் என்று அகழ்வுப் பணிகளை முன்னெடுத்துவரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

இந்த விடயமும் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், அகழ்வுப் பணிகள் விரிவாக வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகின்றது.

அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளைய தினம் திங்கட்கிழமை காலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.



செம்மணியில் இன்றும் பல குழந்தைகளின் எலும்புக்கூடுகள்; பை மற்றும் துணித்துண்டும் மீட்பு மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு வந்த குழு செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நான்காம் அகழ்வுப் பணி இன்று நடைபெற்ற நிலையில் பல குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மண்மாதிரிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பிரத்தியேக குழுவொன்று இன்று  வந்துள்ளது.மனிதப்புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண்மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக, சட்ட மருத்துவ அதிகாரிகளால் விண்ணப்பம் நீதிமன்றத்துக்கு செய்யப்பட்டிருந்தது.இந்த விண்ணப்பத்துக்கு நீதிமன்றம் முறையான அனுமதிகளை வழங்கியதைத் தொடர்ந்தே, மண் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக கொழும்பிலிருந்து குறித்த குழு வருகைதந்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.இதைவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் பீட பேராசிரியர்களும் கார்பன் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். அத்துடன், செய்மதிப் படங்கள் மூலமும், ட்ரோன் மூலமும் மேற்கொண்ட ஆய்விலும் தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு அருகாகவும் புதைகுழிகள் இருக்கலாம் என்று அகழ்வுப் பணிகளை முன்னெடுத்துவரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ சந்தேகம் வெளியிட்டிருந்தார்.இந்த விடயமும் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், அகழ்வுப் பணிகள் விரிவாக வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகின்றது.அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளைய தினம் திங்கட்கிழமை காலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement