ள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்தியாவில் 'கிரீஷ்' (Krrish) நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் அவரை 4-வது சந்தேகநபராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பெயரிட்டுள்ளதுடன், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏர்பஸ் (Airbus) விவகாரம் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் பாசன் அமரசேன, நாமல் ராஜபக்ஷவை 500,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்ததுடன், இந்தத் தடையை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டது.
கூடுதல் பிணை நிபந்தனையாக, சாட்சிகளைத் தலையிடவோ அல்லது அவர்களுக்கு இடையூறு விளைவிக்கவோ கூடாது என்றும் நீதவான் நாமல் ராஜபக்ஷவுக்கு உத்தரவிட்டார்.
எனினும், கிரீஷ் நிறுவன வழக்கு தொடர்பான விசாரணைகள் நிலுவையில் உள்ளதாலும், அதில் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாலும் அவர் தொடர்ந்து சிறைக்காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் நீதிமன்றப் பகுதியில் திரண்டிருந்தனர்.
பிணை உத்தரவு கிடைத்தும் விடுதலையாகாத நாமல் ராஜபக்ஷ - நீதிமன்றம் கடும் உத்தரவு ள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.இந்தியாவில் 'கிரீஷ்' (Krrish) நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் அவரை 4-வது சந்தேகநபராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பெயரிட்டுள்ளதுடன், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.ஏர்பஸ் (Airbus) விவகாரம் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.கொழும்பு கோட்டை நீதிவான் பாசன் அமரசேன, நாமல் ராஜபக்ஷவை 500,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.மேலும், நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்ததுடன், இந்தத் தடையை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டது.கூடுதல் பிணை நிபந்தனையாக, சாட்சிகளைத் தலையிடவோ அல்லது அவர்களுக்கு இடையூறு விளைவிக்கவோ கூடாது என்றும் நீதவான் நாமல் ராஜபக்ஷவுக்கு உத்தரவிட்டார்.எனினும், கிரீஷ் நிறுவன வழக்கு தொடர்பான விசாரணைகள் நிலுவையில் உள்ளதாலும், அதில் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாலும் அவர் தொடர்ந்து சிறைக்காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் நீதிமன்றப் பகுதியில் திரண்டிருந்தனர்.