வேதன முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் இன்று (21) முதல் காலவரையறையற்ற தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இதற்கு முன்னர் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் முதற்கட்டமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் போன்ற வெளிப்புறக் குழுக்களில் பங்கேற்பதில் இருந்து பொறியியலாளர்கள் விலகியிருப்பார்கள் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுத்பால ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.
மேலும், தேசிய தேவைகளைக் கருத்திற் கொண்டு இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த, வீதி அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்படாத ஏனைய பணிகளில் இருந்தும் விலகியிருக்க பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் ஒருங்கிணைப்புப் பணிகளில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ள உமேஷ் அலுத்பால, அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வை வழங்கத் தவறினால் தொழிற்சங்கப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்க போராட்டம் வேதன முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் இன்று (21) முதல் காலவரையறையற்ற தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இதற்கு முன்னர் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.இந்த போராட்டத்தின் முதற்கட்டமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் போன்ற வெளிப்புறக் குழுக்களில் பங்கேற்பதில் இருந்து பொறியியலாளர்கள் விலகியிருப்பார்கள் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுத்பால ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.மேலும், தேசிய தேவைகளைக் கருத்திற் கொண்டு இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த, வீதி அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்படாத ஏனைய பணிகளில் இருந்தும் விலகியிருக்க பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் ஒருங்கிணைப்புப் பணிகளில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ள உமேஷ் அலுத்பால, அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வை வழங்கத் தவறினால் தொழிற்சங்கப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.