• May 23 2026

போராட்டத்தை உடனடியாக கைவிட்ட மின்சார சபை தொழிற்சங்கங்கள்

Chithra / Oct 14th 2025, 11:59 am
image

தாங்கள் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக கைவிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எட்டப்பட்ட வாய்மொழி ஒப்பந்தங்களுக்கான எழுத்துப்பூர்வமான உறுதிப்பாட்டைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழியர்களின் உரிமைகளுக்கான உத்தரவாதங்களைப் பெறுவதற்காகவும் இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்தன.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகளை அதிகாரிகள் முறையாக ஆவணப்படுத்தியுள்ளனர் என்பதை தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

புதிய துணை நிறுவனங்களுக்கு மாறுதலின்போது ஊழியர்களின் உரிமைகள், வேதனம், ஓய்வூதியம் மற்றும் வேலை நிலைமைகள் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, இந்த ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்பதற்காகவே எழுத்துப்பூர்வமான உறுதிப்பாடு அவசியம் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில் மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் இதனை அறிவித்தார்.

முன்னதாக, 6.8 சதவீதத்தினால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிவுகளை முன்வைத்திருந்தது.

இது தொடர்பில், தொடர்புடைய தரப்பினர்களிடம் அந்த ஆணைக்குழு கருத்துகளையும் ஆலோசனைகளையும் கோரியிருந்தன.

அவற்றை பரிசீலித்ததையடுத்து, மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளாது எதிர்வரும் 3 மாதங்களுக்கு தற்போதைய கட்டணத்தையே பேணிச் செல்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

போராட்டத்தை உடனடியாக கைவிட்ட மின்சார சபை தொழிற்சங்கங்கள் தாங்கள் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக கைவிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எட்டப்பட்ட வாய்மொழி ஒப்பந்தங்களுக்கான எழுத்துப்பூர்வமான உறுதிப்பாட்டைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழியர்களின் உரிமைகளுக்கான உத்தரவாதங்களைப் பெறுவதற்காகவும் இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்தன.இது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகளை அதிகாரிகள் முறையாக ஆவணப்படுத்தியுள்ளனர் என்பதை தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.புதிய துணை நிறுவனங்களுக்கு மாறுதலின்போது ஊழியர்களின் உரிமைகள், வேதனம், ஓய்வூதியம் மற்றும் வேலை நிலைமைகள் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, இந்த ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்பதற்காகவே எழுத்துப்பூர்வமான உறுதிப்பாடு அவசியம் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியிருந்தன.இந்நிலையில் மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் இதனை அறிவித்தார்.முன்னதாக, 6.8 சதவீதத்தினால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிவுகளை முன்வைத்திருந்தது.இது தொடர்பில், தொடர்புடைய தரப்பினர்களிடம் அந்த ஆணைக்குழு கருத்துகளையும் ஆலோசனைகளையும் கோரியிருந்தன.அவற்றை பரிசீலித்ததையடுத்து, மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளாது எதிர்வரும் 3 மாதங்களுக்கு தற்போதைய கட்டணத்தையே பேணிச் செல்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement