• Apr 14 2026

வவுனியாவில் முதியவர் படுகொலை – வாடகை தகராறு காரணமா?

Aathira / Apr 11th 2026, 7:55 am
image

வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதற்கட்ட விசாரணைகளில், வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த முதியவர், தனது வீட்டின் மலசலகூடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

அவர் மரணத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.

சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதன் முடிவில், இது இயற்கை மரணம் அல்ல, திட்டமிட்ட படுகொலை என உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

வாடகை பிரச்சினையை மையமாகக் கொண்டு இக்கொலை இடம்பெற்றதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியாவில் முதியவர் படுகொலை – வாடகை தகராறு காரணமா வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த முதியவர், தனது வீட்டின் மலசலகூடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் மரணத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், இது இயற்கை மரணம் அல்ல, திட்டமிட்ட படுகொலை என உறுதி செய்யப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாடகை பிரச்சினையை மையமாகக் கொண்டு இக்கொலை இடம்பெற்றதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement