அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் பகுதிகளை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஆள் நடமாட்டம் குறைந்த வளவில், நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 03) மாலை குறித்த முதியவர் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், பழைய வளத்தாப்பிட்டி காளி கோவில் வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய மயில்வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும், மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், இன்று (ஜூலை 04) காலை சம்மாந்துறை நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளது.
சம்மாந்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
சம்மாந்துறையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் பகுதிகளை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஆள் நடமாட்டம் குறைந்த வளவில், நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 03) மாலை குறித்த முதியவர் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது.சம்பவத்தில் உயிரிழந்தவர், பழைய வளத்தாப்பிட்டி காளி கோவில் வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய மயில்வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும், மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.இந்நிலையில், இன்று (ஜூலை 04) காலை சம்மாந்துறை நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளது.சம்மாந்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.