டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்திருந்த ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு இரவு அஞ்சல் ரயில் சேவை நேற்று(20) இரவு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சல் திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் இரவு அஞ்சல் ரயில் இரவு 7.30 மணிக்கு திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
அதே நேரத்தில், கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் இரவு அஞ்சல் ரயில் இரவு 9.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டது.
கடந்த நவம்பர் 28ஆம் திகதி டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக கிழக்கு ரயில்பாதையில் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
பின்னர் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதை அடுத்து, இதுவரை பகல் நேரங்களில் மட்டுமே ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரவு ரயில் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு இரவு அஞ்சல் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம் டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்திருந்த ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு இரவு அஞ்சல் ரயில் சேவை நேற்று(20) இரவு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த அஞ்சல் திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் இரவு அஞ்சல் ரயில் இரவு 7.30 மணிக்கு திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.அதே நேரத்தில், கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் இரவு அஞ்சல் ரயில் இரவு 9.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டது.கடந்த நவம்பர் 28ஆம் திகதி டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக கிழக்கு ரயில்பாதையில் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.பின்னர் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதை அடுத்து, இதுவரை பகல் நேரங்களில் மட்டுமே ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரவு ரயில் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.