• Mar 15 2026

போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மூன்று மடங்கு அதிகரிப்பு

Aathira / Feb 7th 2026, 12:04 pm
image

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 

மேலும், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆயுதச் சோதனைகள் இரண்டு மடங்கு, போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

பொலிஸின் வரலாற்றில் இது மிக உயர்ந்த பதிவாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

குறைந்த எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு காரணமாக சேவை திறன் உயர் மட்டத்தில் பேணப்பட்டதாகவும், 

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளும் 60% வரை வளர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், 4,500 க்கும் மேற்பட்ட பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மூன்று மடங்கு அதிகரிப்பு 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆயுதச் சோதனைகள் இரண்டு மடங்கு, போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.பொலிஸின் வரலாற்றில் இது மிக உயர்ந்த பதிவாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறைந்த எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு காரணமாக சேவை திறன் உயர் மட்டத்தில் பேணப்பட்டதாகவும், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளும் 60% வரை வளர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 4,500 க்கும் மேற்பட்ட பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement