தமிழ் பேசும் மக்களின் நலன்களில் தமக்கு இருக்கும் தார்மீக பொறுப்பை உணர்ந்து இந்தியா தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஓய்வு பெற்றுச் செல்லுகின்ற இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஷா அவர்களினால் தமிழ் பேசும் கட்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்து கொண்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, சமகால அரசியல் விவகாரங்கள், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் என பல்வேறு விடயங்களை கௌரவ சந்தோஸ் ஷா அவர்கள் பகிர்ந்து கொண்டதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
குறிப்பாக, தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் பேசும் தரப்புகள் தமக்கிடையில் மாத்திரமன்றி, தென்னிலங்கை ஆட்சியளர்களுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உதவி உயர் ஸ்தானிகர் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா மகிழ்ச்சி தமிழ் பேசும் மக்களின் நலன்களில் தமக்கு இருக்கும் தார்மீக பொறுப்பை உணர்ந்து இந்தியா தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.ஓய்வு பெற்றுச் செல்லுகின்ற இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஷா அவர்களினால் தமிழ் பேசும் கட்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்து கொண்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இதன்போது, சமகால அரசியல் விவகாரங்கள், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் என பல்வேறு விடயங்களை கௌரவ சந்தோஸ் ஷா அவர்கள் பகிர்ந்து கொண்டதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.குறிப்பாக, தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் பேசும் தரப்புகள் தமக்கிடையில் மாத்திரமன்றி, தென்னிலங்கை ஆட்சியளர்களுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உதவி உயர் ஸ்தானிகர் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.