• Apr 18 2026

வெயிலில் அலையாதீர்கள்.! 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Aathira / Apr 1st 2026, 4:39 pm
image

மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை (ஏப்ரல் 2) முதல் அமலுக்கு வரும் இந்த அறிவுறுத்தலின்படி, 21 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீண்ட நேரம் வெளியில் இருக்கும்போது மக்களுக்கு கடும் சோர்வு ஏற்படலாம் என்றும், தொடர்ச்சியான உடல் உழைப்பு வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையற்ற நேரங்களில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும், அதிக அளவு தண்ணீர் குடிக்கவும், வெளியே செல்லும்போது தலையை மூடிக்கொள்ளவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 

வெயிலில் அலையாதீர்கள். 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாளை (ஏப்ரல் 2) முதல் அமலுக்கு வரும் இந்த அறிவுறுத்தலின்படி, 21 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நீண்ட நேரம் வெளியில் இருக்கும்போது மக்களுக்கு கடும் சோர்வு ஏற்படலாம் என்றும், தொடர்ச்சியான உடல் உழைப்பு வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தேவையற்ற நேரங்களில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும், அதிக அளவு தண்ணீர் குடிக்கவும், வெளியே செல்லும்போது தலையை மூடிக்கொள்ளவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement