• May 28 2026

"பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றாதே" - நீதி கேட்டு கொந்தளித்த வடகிழக்கு பெண்கள்

Chithra / May 27th 2026, 3:52 pm
image

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, 'வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு' அமைப்பினால் இன்று மட்டக்கப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி, மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் "பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக..." பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்"மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம், சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு பிணை கிடையாது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில்  ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள் உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். இதன்போது மகஜர் வாசிக்கப்பட்டதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டது.

 


இதேவேளை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலும் 'வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு' அமைப்பினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு  நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர. 

 


"பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றாதே" - நீதி கேட்டு கொந்தளித்த வடகிழக்கு பெண்கள் அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, 'வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு' அமைப்பினால் இன்று மட்டக்கப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.அதன்படி, மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் "பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக." பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்"மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம், சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு பிணை கிடையாது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.இச்சம்பவம் தொடர்பில்  ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள் உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். இதன்போது மகஜர் வாசிக்கப்பட்டதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலும் 'வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு' அமைப்பினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு  நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர.  

Advertisement

Advertisement

Advertisement