ரஷ்யாவின் டீசல் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு உக்ரைன் ஜனாதிபதியிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கில் நிலவும் போர் முக்கிய காரணமல்ல எனவும், உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாகவே எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய பொருளாதார உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை உக்ரைன் இராணுவ இலக்குகளாகக் கருதி, அவற்றின் மீது தொடர்ச்சியான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களால் ரஷ்யாவின் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அந்நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் தாக்கம் அமெரிக்காவிலும் உணரப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக டீசல் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு எரிபொருள் உட்கட்டமைப்புகளைத் தவிர்ந்த வேறு இலக்குகளைத் தெரிவுசெய்யுமாறும், குறிப்பாக எரிபொருள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் எனவும் ஸெலென்ஸ்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (14) மீண்டும் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி அரேபியா மீது புதிய ஹூதி தாக்குதல்கள் இடம்பெற்றமை மற்றும் மத்திய கிழக்கில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டமை உள்ளிட்ட காரணங்களால் எண்ணெய் விநியோகம் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 3.03 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 107.51 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, WTI ரக கச்சா எண்ணெயின் விலை 2.72 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 102.08 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியாவின் கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய், ஈராக்கில் இருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து சவூதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியை மாற்று வழிகளில் மேற்கொள்ள உதவும் இந்த குழாய் மூடப்பட்டுள்ளமை, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
இதனிடையே, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச சந்தை அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய எரிபொருள் இலக்குகளை தாக்க வேண்டாம் - உக்ரைனிடம் ட்ரம்ப் கோரிக்கை ரஷ்யாவின் டீசல் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு உக்ரைன் ஜனாதிபதியிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கில் நிலவும் போர் முக்கிய காரணமல்ல எனவும், உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாகவே எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.உக்ரைனின் முக்கிய பொருளாதார உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை உக்ரைன் இராணுவ இலக்குகளாகக் கருதி, அவற்றின் மீது தொடர்ச்சியான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்த தாக்குதல்களால் ரஷ்யாவின் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அந்நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் தாக்கம் அமெரிக்காவிலும் உணரப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக டீசல் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.ரஷ்யா மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு எரிபொருள் உட்கட்டமைப்புகளைத் தவிர்ந்த வேறு இலக்குகளைத் தெரிவுசெய்யுமாறும், குறிப்பாக எரிபொருள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் எனவும் ஸெலென்ஸ்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (14) மீண்டும் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி அரேபியா மீது புதிய ஹூதி தாக்குதல்கள் இடம்பெற்றமை மற்றும் மத்திய கிழக்கில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டமை உள்ளிட்ட காரணங்களால் எண்ணெய் விநியோகம் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 3.03 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 107.51 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அதேவேளை, WTI ரக கச்சா எண்ணெயின் விலை 2.72 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 102.08 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியாவின் கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய், ஈராக்கில் இருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து சவூதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியை மாற்று வழிகளில் மேற்கொள்ள உதவும் இந்த குழாய் மூடப்பட்டுள்ளமை, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.இதனிடையே, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச சந்தை அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.