• Feb 15 2026

வளிமண்டலத்தில் வலுவடையும் தளம்பல்; எதிர்வரும் 8ஆம் திகதி மழை அதிகரிக்கும்!

shanuja / Jan 5th 2026, 4:37 pm
image

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இதன் காரணமாக, ஜனவரி 08 ஆம் திகதி முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். 


ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வளிமண்டலத்தில் வலுவடையும் தளம்பல்; எதிர்வரும் 8ஆம் திகதி மழை அதிகரிக்கும் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 08 ஆம் திகதி முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement