• Apr 27 2026

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Chithra / Apr 26th 2026, 2:02 pm
image

நாட்டின் சில பலகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று (26) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


*  இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வெட்டவெளிகளிலோ அல்லது மரங்களின் கீழோ தங்குவதைத் தவிர்க்கவும்.


* வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்கவும்.


* மின்சார உபகரணங்களை மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவும்.


* அவசரத் தேவைகளின்றி வாகனங்களில் பயணிப்பதைக் குறைத்துக் கொள்ளவும்.


மின்னல் விபத்துக்களைக் குறைக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலதிகமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை நாட்டின் சில பலகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று (26) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *  இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வெட்டவெளிகளிலோ அல்லது மரங்களின் கீழோ தங்குவதைத் தவிர்க்கவும்.* வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்கவும்.* மின்சார உபகரணங்களை மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவும்.* அவசரத் தேவைகளின்றி வாகனங்களில் பயணிப்பதைக் குறைத்துக் கொள்ளவும்.மின்னல் விபத்துக்களைக் குறைக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலதிகமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement