• May 21 2026

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம் - அதிக ஆபத்துள்ள 39 பிரிவுகள் அடையாளம்! 15 மரணங்கள் பதிவு

Chithra / May 20th 2026, 7:42 am
image

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


2026 மே 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி 15 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.


அதிக ஆபத்துள்ள 39 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை அடையாளம் கண்டுள்ளோம். இதற்கு மேலதிகமாக, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் காணப்படுகின்றன. 


மாவட்ட ரீதியாகப் பார்த்தால் 25 மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். அவர்களுள் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்தே அதிகளவிலான நோயாளர்கள் அறிக்கை செய்யப்பட்டுள்ளனர்.


பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளமை பூச்சியியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம் - அதிக ஆபத்துள்ள 39 பிரிவுகள் அடையாளம் 15 மரணங்கள் பதிவு இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.2026 மே 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி 15 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.அதிக ஆபத்துள்ள 39 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை அடையாளம் கண்டுள்ளோம். இதற்கு மேலதிகமாக, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் காணப்படுகின்றன. மாவட்ட ரீதியாகப் பார்த்தால் 25 மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். அவர்களுள் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்தே அதிகளவிலான நோயாளர்கள் அறிக்கை செய்யப்பட்டுள்ளனர்.பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளமை பூச்சியியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர மேலும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement