• Apr 14 2026

119 அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம்: பொதுமக்களிடமிருந்து தினசரி புகார்!

Chithra / Apr 13th 2026, 3:59 pm
image

119 பொலிஸ் அவசர உதவி எண்ணிற்கு செய்யப்பட்ட அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்களிடமிருந்து பல புகார்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்துள்ளார்.


இத்தகைய புகார்கள் தினசரி தமக்கு கிடைக்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


119 அவசர உதவி எண்ணிற்கு தினமும் சுமார் 4,000 முதல் 4,500 வரை அழைப்புகள் பெறப்படுகின்றன.


மேலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பொலிஸாரின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களின் கண்காணிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


விமர்சனங்கள் இருந்தபோதிலும், இலங்கை பொலிஸார் மற்றும் சில அதிகாரிகளின் நேர்மையான பங்களிப்புகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


பொதுமக்களுக்கு மேலும் திறமையான மற்றும் விரைவான சேவையை வழங்கும் நோக்கில், பொலிஸாரின்  பதிலளிப்பு அமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

119 அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம்: பொதுமக்களிடமிருந்து தினசரி புகார் 119 பொலிஸ் அவசர உதவி எண்ணிற்கு செய்யப்பட்ட அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்களிடமிருந்து பல புகார்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்துள்ளார்.இத்தகைய புகார்கள் தினசரி தமக்கு கிடைக்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.119 அவசர உதவி எண்ணிற்கு தினமும் சுமார் 4,000 முதல் 4,500 வரை அழைப்புகள் பெறப்படுகின்றன.மேலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பொலிஸாரின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களின் கண்காணிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.விமர்சனங்கள் இருந்தபோதிலும், இலங்கை பொலிஸார் மற்றும் சில அதிகாரிகளின் நேர்மையான பங்களிப்புகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.பொதுமக்களுக்கு மேலும் திறமையான மற்றும் விரைவான சேவையை வழங்கும் நோக்கில், பொலிஸாரின்  பதிலளிப்பு அமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement