• May 01 2025

நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தியில் வீழ்ச்சி

Chithra / Apr 20th 2025, 8:52 am
image


நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிர்களான தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

வறட்சியான காலநிலை காரணமாகக் கடந்த பெப்ரவரி மாதத்தில் தேயிலை உற்பத்தியானது 15.6 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இறப்பர் உற்பத்தி 5.3 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதேநேரம் இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் 178.1 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்ததாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு வீழ்ச்சியாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தியில் வீழ்ச்சி நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிர்களான தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாகக் கடந்த பெப்ரவரி மாதத்தில் தேயிலை உற்பத்தியானது 15.6 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இறப்பர் உற்பத்தி 5.3 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநேரம் இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் 178.1 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்ததாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு வீழ்ச்சியாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement