• Apr 25 2026

அலுவலக ரயில்களை தடையின்றி முன்னெடுக்க தீர்மானம்!

shanu / Apr 24th 2026, 10:50 am
image

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா கடுகதி ரயில் வாதுவை பகுதியில் தடம் புரண்ட போதிலும், அலுவலகத் ரயில் சேவைகளை ரத்து செய்யாமல் முன்னெடுக்கத் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. 


அதன்படி, தடம் புரண்ட பகுதி வரை ரயில்களை இயக்கி, அங்கு பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் மற்றுமொரு ரயில் மூலம் அவர்களை அழைத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


எவ்வாறாயினும், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் ரயில்களின் செயல்பாடுகள் குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம் புரண்டதுடன், இதன் காரணமாக இருவழி பாதையின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அலுவலக ரயில்களை தடையின்றி முன்னெடுக்க தீர்மானம் பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா கடுகதி ரயில் வாதுவை பகுதியில் தடம் புரண்ட போதிலும், அலுவலகத் ரயில் சேவைகளை ரத்து செய்யாமல் முன்னெடுக்கத் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தடம் புரண்ட பகுதி வரை ரயில்களை இயக்கி, அங்கு பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் மற்றுமொரு ரயில் மூலம் அவர்களை அழைத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் ரயில்களின் செயல்பாடுகள் குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம் புரண்டதுடன், இதன் காரணமாக இருவழி பாதையின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement