• May 19 2026

டித்வா சூறாவளியில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரண சான்றிதழ்

Aathira / Dec 13th 2025, 1:11 pm
image

டித்வா சூறாவளியில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்தார்.

அதற்காக இற்றைப்படுத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த சுற்றறிக்கையில், காணாமல் போனவர்களின் நாட்டு தூதர்கள் அல்லது கொன்சூலர் அலுவலகங்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் ஆராய்ந்து உறுதிப்படுத்தப்பட்டால் மரண சான்று வழங்கப்படும். 

டித்வா சூறாவளியின் பின்னர் பேரிடர் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள, 22 மாவட்டங்களில் தங்கி இருந்த வெளிநாட்டவர்களுக்கு மாத்திரமே இந்த நடவடிக்கை பொருந்தும். 

அதன்படி காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய 22 மாவட்டங்களிலும் தங்கி இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இந்த நடைமுறை அமுலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளியில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரண சான்றிதழ் டித்வா சூறாவளியில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்தார்.அதற்காக இற்றைப்படுத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையில், காணாமல் போனவர்களின் நாட்டு தூதர்கள் அல்லது கொன்சூலர் அலுவலகங்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் ஆராய்ந்து உறுதிப்படுத்தப்பட்டால் மரண சான்று வழங்கப்படும். டித்வா சூறாவளியின் பின்னர் பேரிடர் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள, 22 மாவட்டங்களில் தங்கி இருந்த வெளிநாட்டவர்களுக்கு மாத்திரமே இந்த நடவடிக்கை பொருந்தும். அதன்படி காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய 22 மாவட்டங்களிலும் தங்கி இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இந்த நடைமுறை அமுலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement