• May 23 2026

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம்; 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து சாதனை படைத்த தமிழன்!

Chithra / Oct 22nd 2025, 7:45 pm
image


யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன்  என்பவர்,  பிரான்ஸ் நாட்டிலிருந்து  சைக்கிள் மூலம் 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து, நாகையில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்து சாதனை படைத்துள்ளார். 

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் என்பவர் உள்நாட்டு போர் காரணமாக பிரான்ஸ் நாட்டில் குடியேறியுள்ளார்.  

போர் முடிவுக்கு வந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டிற்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்துள்ளார். 

இதையடுத்து கடந்த ஜூலை 9 ஆம் திகதி பிரான்ஸில் இருந்து பயணத்தை ஆரம்பித்த அவர்,

ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கடந்து சாதனை படைத்துள்ளார். 

3 மாத பயணத்தை தமிழ்நாடு - நாகையில் முடித்த அவர், நாகை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் யாழ்பாணத்தை வந்தடைந்துள்ளார். 

இன்று அதிகாலை துறைமுகத்தை வந்தடைந்த அவருக்கு சுபம் நிறுவனத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 

பல நாடுகளின் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்களை சைக்கிளில் சென்றதால் அறிய முடிந்தது என்று கூறியுள்ள இனோசூரண், பல ஆண்டுகள் கழித்து பூர்வீக நாடான இலங்கைக்கு வருவது  மகிழ்ச்சி அளிப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.


பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம்; 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து சாதனை படைத்த தமிழன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன்  என்பவர்,  பிரான்ஸ் நாட்டிலிருந்து  சைக்கிள் மூலம் 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து, நாகையில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்து சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் என்பவர் உள்நாட்டு போர் காரணமாக பிரான்ஸ் நாட்டில் குடியேறியுள்ளார்.  போர் முடிவுக்கு வந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டிற்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்துள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை 9 ஆம் திகதி பிரான்ஸில் இருந்து பயணத்தை ஆரம்பித்த அவர்,ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கடந்து சாதனை படைத்துள்ளார். 3 மாத பயணத்தை தமிழ்நாடு - நாகையில் முடித்த அவர், நாகை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் யாழ்பாணத்தை வந்தடைந்துள்ளார். இன்று அதிகாலை துறைமுகத்தை வந்தடைந்த அவருக்கு சுபம் நிறுவனத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளின் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்களை சைக்கிளில் சென்றதால் அறிய முடிந்தது என்று கூறியுள்ள இனோசூரண், பல ஆண்டுகள் கழித்து பூர்வீக நாடான இலங்கைக்கு வருவது  மகிழ்ச்சி அளிப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement