வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்கரையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து விரும் நிலையில் ஏனைய சிறு தொழில் மீனவர்கள் இதனால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் மீனம்பா படகுகளை கடற் படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வரும் நிலையில் அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக சட்டவிரோத தொழில இடம் பெறுவதாக அப்போது சிறு தொழில் மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடற்கரையினர் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும்.
சட்ட விரோத மீன்பிடிக்க ஈடுபடும் மீனவர்கள் சிலருக்கு அதிகாரிகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் ஆதரவு வழங்குவதாக நம் தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
நாங்கள் அரசியல்வாதிகளிடம் ஒன்றை கேட்க விரும்புகிறோம் அரசியலுக்காக எதையும் செய்யாதீர்கள் உண்மை நிலவரத்தை ஆராய்ந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபடுபவர்களை நிறுத்துமாறு கூறுங்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
வடமராட்சிக் கிழக்கில் சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துங்கள் - மீனவ அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்கரையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து விரும் நிலையில் ஏனைய சிறு தொழில் மீனவர்கள் இதனால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் மீனம்பா படகுகளை கடற் படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வரும் நிலையில் அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக சட்டவிரோத தொழில இடம் பெறுவதாக அப்போது சிறு தொழில் மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடற்கரையினர் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும்.சட்ட விரோத மீன்பிடிக்க ஈடுபடும் மீனவர்கள் சிலருக்கு அதிகாரிகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் ஆதரவு வழங்குவதாக நம் தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.நாங்கள் அரசியல்வாதிகளிடம் ஒன்றை கேட்க விரும்புகிறோம் அரசியலுக்காக எதையும் செய்யாதீர்கள் உண்மை நிலவரத்தை ஆராய்ந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபடுபவர்களை நிறுத்துமாறு கூறுங்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.