• May 06 2026

Chithra / May 6th 2026, 1:02 pm
image

பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் த.வெ.கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தள்ளது. 


தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. த.வெ.க.வை ஆதரிப்பதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.


மதவாத சக்திகளை கூட்டணியில் அனுமதிக்ககூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.


இந்த கூட்டணியானது இனி வரும் காலங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, த.வெ.க.வை காங்கிரஸ் ஆதரவளிப்பது என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான போது தி.மு.க.விடம் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை நிரூபித்து எப்போது ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கியுள்ளது.

த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் த.வெ.கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தள்ளது. தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. த.வெ.க.வை ஆதரிப்பதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.மதவாத சக்திகளை கூட்டணியில் அனுமதிக்ககூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.இந்த கூட்டணியானது இனி வரும் காலங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, த.வெ.க.வை காங்கிரஸ் ஆதரவளிப்பது என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான போது தி.மு.க.விடம் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை நிரூபித்து எப்போது ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement