புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மீது பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சருடன் இணைந்து பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவத்தை, பிரதேச சபை தவிசாளர் வெளியில் கூறி செல்வதாக தெரிவித்து NPP பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நேற்றையதினம் (13) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெற்றிருந்தது.
இதன்போது, தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்து கொண்டதனை வெளியே கூறி செல்வதான குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் முறைப்பாட்டாளர் தரப்பினரிடம் கோரியுள்ளனர்.
எனினும், அதற்கான போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பினருக்கு பொலிஸாரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் வே.கரிகாலன்,
தாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தவிசாளராக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அமைவாக பிரதேச சபையின் அபிவிருத்திப் பணிகளையும் மக்கள் சேவையையும் முன்னெடுத்து வருவதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தமது கௌரவத்தையும் நற்பெயரையும் பாதிப்பதுடன், பிரதேச சபையின் மக்கள் சேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்.
நாங்கள் அரசியலுக்காக அல்ல, மக்களுக்காகவே பணியாற்றுகின்றோம். மக்களின் தேவைகளும் பிரதேசத்தின் அபிவிருத்தியுமே எமது முதன்மையான நோக்கங்கள் என தவிசாளர் வே.கரிகாலன் மேலும் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு தவிசாளர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மீது பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சருடன் இணைந்து பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவத்தை, பிரதேச சபை தவிசாளர் வெளியில் கூறி செல்வதாக தெரிவித்து NPP பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.இதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நேற்றையதினம் (13) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெற்றிருந்தது.இதன்போது, தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்து கொண்டதனை வெளியே கூறி செல்வதான குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் முறைப்பாட்டாளர் தரப்பினரிடம் கோரியுள்ளனர். எனினும், அதற்கான போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பினருக்கு பொலிஸாரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் வே.கரிகாலன், தாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தவிசாளராக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அமைவாக பிரதேச சபையின் அபிவிருத்திப் பணிகளையும் மக்கள் சேவையையும் முன்னெடுத்து வருவதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தமது கௌரவத்தையும் நற்பெயரையும் பாதிப்பதுடன், பிரதேச சபையின் மக்கள் சேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்.நாங்கள் அரசியலுக்காக அல்ல, மக்களுக்காகவே பணியாற்றுகின்றோம். மக்களின் தேவைகளும் பிரதேசத்தின் அபிவிருத்தியுமே எமது முதன்மையான நோக்கங்கள் என தவிசாளர் வே.கரிகாலன் மேலும் தெரிவித்துள்ளார்.