• Nov 24 2026

திருமணமான மறுநாளே குழந்தை பிரசவம்

Ziya / Nov 24th 2026, 10:04 am
image

இந்தியாவின் தமிழ்நாடு, நெல்லை மாவட்டத்தில் திருமணமான மறுநாளே ஏழு மாதக் குறைமாதக் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாளையங்கோட்டை அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 15ஆம் திகதி பெரியோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.


திருமணமான மறுநாள் காலை இளம்பெண்ணுக்கு கடுமையான வயிற்றுவலியும் இரத்தப்போக்கும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இதற்கிடையில், புதுமாப்பிள்ளையின் வீட்டின் வாசலில் ஏழு மாதக் குறைமாதக் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மணமகன் அளித்த முறைப்பாட்டில், இளம்பெண் கர்ப்பமாக இருந்ததை மறைத்து திருமணம் செய்து வைத்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.


இதையடுத்து, இளம்பெண் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

திருமணமான மறுநாளே குழந்தை பிரசவம் இந்தியாவின் தமிழ்நாடு, நெல்லை மாவட்டத்தில் திருமணமான மறுநாளே ஏழு மாதக் குறைமாதக் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாளையங்கோட்டை அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 15ஆம் திகதி பெரியோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.திருமணமான மறுநாள் காலை இளம்பெண்ணுக்கு கடுமையான வயிற்றுவலியும் இரத்தப்போக்கும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், புதுமாப்பிள்ளையின் வீட்டின் வாசலில் ஏழு மாதக் குறைமாதக் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மணமகன் அளித்த முறைப்பாட்டில், இளம்பெண் கர்ப்பமாக இருந்ததை மறைத்து திருமணம் செய்து வைத்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதையடுத்து, இளம்பெண் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement