• May 23 2026

கடமை நேரத்தில் மது அருந்தியபடி பயணம்; யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது!

shanu / Oct 25th 2025, 7:59 pm
image

யாழ்தேவி ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25)  கைது செய்யப்பட்டுள்ளார். 


காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. 


அனுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் மது அருந்தியிருந்த நிலையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 


அதனையடுத்து யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடமை நேரத்தில் மது அருந்தியபடி பயணம்; யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது யாழ்தேவி ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25)  கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. அனுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் மது அருந்தியிருந்த நிலையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அதனையடுத்து யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement