மாத்தறை – காலி வீதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் இன்று பிற்பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாகப் பரவிய நிலையில், அருகில் அமைந்திருந்த மற்றொரு கடைக்கும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதிக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணிகளுக்காக மாத்தறை மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தீப்பரவல் சம்பவத்தில் இதுவரை எவரும் காயமடையவோ உயிரிழக்கவோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாத்தறையில் பரபரப்பு – பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் திடீர் தீ மின்சாரம் துண்டிப்பு மாத்தறை – காலி வீதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் இன்று பிற்பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீ வேகமாகப் பரவிய நிலையில், அருகில் அமைந்திருந்த மற்றொரு கடைக்கும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தைத் தொடர்ந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதிக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.தீயை அணைக்கும் பணிகளுக்காக மாத்தறை மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இந்தத் தீப்பரவல் சம்பவத்தில் இதுவரை எவரும் காயமடையவோ உயிரிழக்கவோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.