நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலையில், நாளை (பெப்ரவரி 12) முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பொதுவாக சீரான வானிலை நிலவும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீட்டர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
காற்றின் வேகம் அதிகரிக்கும் மேற்கூறிய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வானிலையில் நாளை முதல் மாற்றம் - அதிகரிக்கும் காற்றின் வேகம் நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலையில், நாளை (பெப்ரவரி 12) முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பொதுவாக சீரான வானிலை நிலவும்.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீட்டர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.காற்றின் வேகம் அதிகரிக்கும் மேற்கூறிய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.