• May 14 2026

இன்று பிற்பகல் மழைக்கு வாய்ப்பு; நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Chithra / Mar 22nd 2026, 7:54 am
image

மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும். 


இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


குறிப்பாக திறந்த வெளிகளில் தங்குவதைத் தவிர்ப்பது, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் மழைக்கு வாய்ப்பு; நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.குறிப்பாக திறந்த வெளிகளில் தங்குவதைத் தவிர்ப்பது, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement