• Sep 30 2026

வட்டி வீதம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் முக்கிய முடிவு அறிவிப்பு

Chithra / Sep 30th 2026, 11:13 am
image


இலங்கை மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் தொடர்ந்து மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.


இதன்படி, ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 8.75 சதவீதமாக தொடர்ந்து பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை மேற்கொண்ட கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற நிலை மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.7% உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்து, இலங்கை பொருளாதாரம் தொடர்ச்சியான மீள்திறனைக் காட்டியுள்ளது என்று மத்திய வங்கி கூறுகின்றது. 


இதற்கிடையில், நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் 8% ஆக அதிகரித்துள்ளது.


எரிசக்தி விலை உயர்வின் தாக்கம் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்குப் பரவியுள்ளது என்று மத்திய வங்கி தெரிவிக்கின்றது.


இதற்கிடையில், நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணிக் கையிருப்பு, ஆகஸ்ட் 2026 இன் முடிவில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.


இதன்படி, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை பணவீக்கம் உயர் ஒற்றை இலக்கங்களில் நீடிக்கும் என்றும், அதன் பிறகு படிப்படியாக 5% என்ற இலக்கை நோக்கிக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வட்டி வீதம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் முக்கிய முடிவு அறிவிப்பு இலங்கை மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் தொடர்ந்து மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.இதன்படி, ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 8.75 சதவீதமாக தொடர்ந்து பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை மேற்கொண்ட கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற நிலை மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.7% உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்து, இலங்கை பொருளாதாரம் தொடர்ச்சியான மீள்திறனைக் காட்டியுள்ளது என்று மத்திய வங்கி கூறுகின்றது. இதற்கிடையில், நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் 8% ஆக அதிகரித்துள்ளது.எரிசக்தி விலை உயர்வின் தாக்கம் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்குப் பரவியுள்ளது என்று மத்திய வங்கி தெரிவிக்கின்றது.இதற்கிடையில், நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணிக் கையிருப்பு, ஆகஸ்ட் 2026 இன் முடிவில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.இதன்படி, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை பணவீக்கம் உயர் ஒற்றை இலக்கங்களில் நீடிக்கும் என்றும், அதன் பிறகு படிப்படியாக 5% என்ற இலக்கை நோக்கிக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement