சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இரு தினங்களாக நடாத்தப்பட்ட விசேட இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாமில், சுமார் 550 நோயாளர்களுக்கு வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சுகாதார வரலாற்றிலேயே மிகச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகக் கருதப்படும் இம்முகாம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் Sammanthurai Golden City Lions Club, NAJA Residency, மரியம் Filling Station மற்றும் Farook Filling Station ஆகிய அமைப்புகளின் இணை அனுசரணையில் கடந்த ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
இலங்கை கண் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த விசேட கண் மருத்துவ நிபுணர்கள் நேரடியாக வருகை தந்து இச்சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
இச்சிகிச்சை முகாமின் முதற்கட்டமாக ஆகஸ்ட் 01 ஆம் திகதியன்று 300 நோயாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 02 ஆம் திகதியன்று 250 நோயாளர்களுக்கும் கட்டம் கட்டமாகச் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.
இத்தகைய மகத்தான மருத்துவச் சேவையினைச் சிறப்பாக முன்னெடுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் பங்களிப்புச் செய்தவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று, ஆகஸ்ட் 02 ஆம் திகதி மாலை வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, அர்ப்பணிப்பான சேவையை வழங்கிய விசேட மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், பின்னணி ஊழியர்கள், தொண்டர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 550 பேருக்கு கண்புரை சத்திரசிகிச்சை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இரு தினங்களாக நடாத்தப்பட்ட விசேட இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாமில், சுமார் 550 நோயாளர்களுக்கு வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்தின் சுகாதார வரலாற்றிலேயே மிகச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகக் கருதப்படும் இம்முகாம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் Sammanthurai Golden City Lions Club, NAJA Residency, மரியம் Filling Station மற்றும் Farook Filling Station ஆகிய அமைப்புகளின் இணை அனுசரணையில் கடந்த ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.இலங்கை கண் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த விசேட கண் மருத்துவ நிபுணர்கள் நேரடியாக வருகை தந்து இச்சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.இச்சிகிச்சை முகாமின் முதற்கட்டமாக ஆகஸ்ட் 01 ஆம் திகதியன்று 300 நோயாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 02 ஆம் திகதியன்று 250 நோயாளர்களுக்கும் கட்டம் கட்டமாகச் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.இத்தகைய மகத்தான மருத்துவச் சேவையினைச் சிறப்பாக முன்னெடுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் பங்களிப்புச் செய்தவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று, ஆகஸ்ட் 02 ஆம் திகதி மாலை வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது, அர்ப்பணிப்பான சேவையை வழங்கிய விசேட மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், பின்னணி ஊழியர்கள், தொண்டர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.