• Oct 04 2026

தியாக தீபம் திலீபன் சிலை அகற்றல் வழக்கு: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Aathira / Oct 3rd 2026, 7:50 am
image

தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டமை மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் ஒலிபெருக்கி சாதனங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான இரண்டு வழக்குகள் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பில் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் கருத்து தெரிவிக்கையில், குறித்த இரண்டு வழக்குகளும் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தாம் அறிந்ததாக தெரிவித்தார்.

மேலும், வழக்குகள் தொடர்பான சில தகவல்கள் பொலிஸாரால் உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில், குறித்த வழக்குகளில் ஆஜராகுவதற்காக தாம் நீதிமன்றத்திற்கு சென்றிருந்ததாக சட்டத்தரணி தெரிவித்தார்.

எனினும், வழக்கு அழைக்கப்பட்டபோது சந்தேகநபர்களாக எவருடைய பெயர்களும் குறிப்பிடப்படவில்லை எனவும், ஒலிபெருக்கி சாதனங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கிலும் எவரும் அழைக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இதனால், குறித்த வழக்குகளில் தாம் எந்தவிதமான விண்ணப்பங்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் மேலும் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபன் சிலை அகற்றல் வழக்கு: நீதிமன்றத்தில் நடந்தது என்ன தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டமை மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் ஒலிபெருக்கி சாதனங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான இரண்டு வழக்குகள் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.இந்த வழக்குகள் தொடர்பில் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் கருத்து தெரிவிக்கையில், குறித்த இரண்டு வழக்குகளும் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தாம் அறிந்ததாக தெரிவித்தார்.மேலும், வழக்குகள் தொடர்பான சில தகவல்கள் பொலிஸாரால் உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதனடிப்படையில், குறித்த வழக்குகளில் ஆஜராகுவதற்காக தாம் நீதிமன்றத்திற்கு சென்றிருந்ததாக சட்டத்தரணி தெரிவித்தார்.எனினும், வழக்கு அழைக்கப்பட்டபோது சந்தேகநபர்களாக எவருடைய பெயர்களும் குறிப்பிடப்படவில்லை எனவும், ஒலிபெருக்கி சாதனங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கிலும் எவரும் அழைக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.இதனால், குறித்த வழக்குகளில் தாம் எந்தவிதமான விண்ணப்பங்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement