• May 23 2026

ஒன்றுடன் ஒன்று மோதிய கெப் ரக வாகனங்கள்; கண்டி - யாழ்ப்பாணம் ஏ -9 வீதியில் விபத்து!

shanu / Oct 20th 2025, 3:46 pm
image

கண்டி - யாழ்ப்பாணம் ஏ -9 வீதியில் அலவத்துகொட,வெலிகந்த சந்திக்கு அருகில் இரண்டு கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அதிக வேகத்தில் பயணித்த பொலேரோ ரக கெப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தின் போது பொலேரோ ரக கெப் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



ஒன்றுடன் ஒன்று மோதிய கெப் ரக வாகனங்கள்; கண்டி - யாழ்ப்பாணம் ஏ -9 வீதியில் விபத்து கண்டி - யாழ்ப்பாணம் ஏ -9 வீதியில் அலவத்துகொட,வெலிகந்த சந்திக்கு அருகில் இரண்டு கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதிக வேகத்தில் பயணித்த பொலேரோ ரக கெப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தின் போது பொலேரோ ரக கெப் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement