மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 58 வயதுடைய விவசாயி உள்நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரியினால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் விவசாயி ஒருவர் தோட்டத்தில் வைத்து இனம் தெரியாதோரால் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மட்டு. போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று (21) சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் 3 முறை அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
3 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட மட்டு. விவசாயி - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 58 வயதுடைய விவசாயி உள்நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரியினால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஞாயிற்றுக்கிழமை காலையில் களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் விவசாயி ஒருவர் தோட்டத்தில் வைத்து இனம் தெரியாதோரால் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மட்டு. போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.இதனையடுத்து நேற்று (21) சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் 3 முறை அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.