• Sep 14 2025

மரத்துடன் மோதி சிதறிய பேருந்து !

shanuja / Sep 13th 2025, 12:05 pm
image

பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்த வேளையில் மரத்துடன் மோதி சிதறி விபத்திற்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் இன்று சனிக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர். 


குறித்த பகுதி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி  அங்கிருந்த இரும்புக் கம்பியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தின் போது பேருந்தின் முன்பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மரத்துடன் மோதி சிதறிய பேருந்து பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்த வேளையில் மரத்துடன் மோதி சிதறி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் இன்று சனிக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி  அங்கிருந்த இரும்புக் கம்பியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது பேருந்தின் முன்பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement