டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹங்வெல்ல, வத்தரக்க, மீகொட மற்றும் கல்கெதர உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நீண்டகாலமாக அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வந்த வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள், குறித்த நபர் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை தங்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, தெற்கு கொழும்பு குற்றப்பிரிவு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ஹங்வெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினருக்கு ஹங்வெல்ல வர்த்தகர் சங்கம் மற்றும் பிரதேச மக்கள் பதாகைகளை ஏந்தி நன்றி தெரிவித்துள்ளனர்.
பிச்சைக்காரர்கள் முதல் வர்த்தகர்கள் வரை பல்வேறு தரப்பினரிடமிருந்து 100 ரூபாய் முதல் இலட்சக்கணக்கான ரூபாய் வரை கட்டாயக் கப்பம் வசூலித்து வந்ததாகவும், இதனால் தாம் நீண்டகாலமாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், எம்பிலிப்பிட்டிய பகுதியில் பாலியல் வன்புணர்வு குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ‘பஸ் லலித்’, ஹங்வெல்ல பகுதியில் அச்சுறுத்தல் சூழலை ஏற்படுத்திய பின்னர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டுபாயில் வைத்து அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வந்த அரசாங்கத்திற்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும், சட்டத்தை மதிக்கும் அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்காக கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘பஸ் லலித்’ கைது: வெடி கொளுத்தி மகிழ்ச்சி தெரிவித்த ஹங்வெல்ல மக்கள் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹங்வெல்ல, வத்தரக்க, மீகொட மற்றும் கல்கெதர உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.நீண்டகாலமாக அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வந்த வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள், குறித்த நபர் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை தங்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, தெற்கு கொழும்பு குற்றப்பிரிவு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ஹங்வெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினருக்கு ஹங்வெல்ல வர்த்தகர் சங்கம் மற்றும் பிரதேச மக்கள் பதாகைகளை ஏந்தி நன்றி தெரிவித்துள்ளனர்.பிச்சைக்காரர்கள் முதல் வர்த்தகர்கள் வரை பல்வேறு தரப்பினரிடமிருந்து 100 ரூபாய் முதல் இலட்சக்கணக்கான ரூபாய் வரை கட்டாயக் கப்பம் வசூலித்து வந்ததாகவும், இதனால் தாம் நீண்டகாலமாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.மேலும், எம்பிலிப்பிட்டிய பகுதியில் பாலியல் வன்புணர்வு குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ‘பஸ் லலித்’, ஹங்வெல்ல பகுதியில் அச்சுறுத்தல் சூழலை ஏற்படுத்திய பின்னர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டுபாயில் வைத்து அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வந்த அரசாங்கத்திற்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.அத்துடன், பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும், சட்டத்தை மதிக்கும் அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்காக கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.