• Feb 06 2026

போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகளும் நடத்துநர்களும் சிக்கினர்!

Bus
Chithra / Feb 6th 2026, 2:45 pm
image

 

கொழும்பில் போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட 8 பேர் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர்.


மொரட்டுவை பஸ் தரிப்பிடத்திலிருந்து புறப்படும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  விசேட  போதைப்பொருள் பரிசோனையின் போதே இந்த 8 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.


இதன்போது, சுமார் 250 பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். 


போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட 8 பேரில் ஐவர் கஞ்சா போதைப்பொருளும், இருவர் ஹெரோயின் போதைப்பொருளும்,  ஒருவர் ஐஸ் போதைப்பொருளும், மற்றுமொருவர் ஐஸ், ஹெரோயின்  உள்ளிட்ட இரண்டு போதைப்பொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக பரிசோனையில் தெரியவந்துள்ளது.


இவ்வாறு போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகளும் நடத்துநர்களும் சிக்கினர்  கொழும்பில் போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட 8 பேர் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர்.மொரட்டுவை பஸ் தரிப்பிடத்திலிருந்து புறப்படும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  விசேட  போதைப்பொருள் பரிசோனையின் போதே இந்த 8 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.இதன்போது, சுமார் 250 பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட 8 பேரில் ஐவர் கஞ்சா போதைப்பொருளும், இருவர் ஹெரோயின் போதைப்பொருளும்,  ஒருவர் ஐஸ் போதைப்பொருளும், மற்றுமொருவர் ஐஸ், ஹெரோயின்  உள்ளிட்ட இரண்டு போதைப்பொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக பரிசோனையில் தெரியவந்துள்ளது.இவ்வாறு போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement