• May 18 2024

பிரித்தானிய உயர்ஸ்தானிகர்- சாணக்கியன் எம்.பி திடீர் சந்திப்பு...!

Sharmi / Apr 30th 2024, 12:14 pm
image

Advertisement

பிரித்தானிய  உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை சந்தித்துள்ளார். 

நேற்றையதினம் (29) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள போதே அவர் குறித்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த சந்திப்பின் போது  இதன்போது மாவட்ட மற்றும் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள்; நேரடியாக முகம் கொடுக்கும் பிரச்சினைகளான மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை. கனிய வளங்களான இல்மனைட் அகழ்வு இறால் வளர்ப்பு திட்டம் சம்பந்தமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் சட்டவிரோத காணி அபகரிப்பு சட்ட விரோதமான மீன்பிடி தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் அவர் மேலும் குறித்த பதிவில் தெரிவிக்கையில், மட்டக்களப்பு சார்ந்த விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விவசாய ஆரம்பக் கொடுப்பனவானது பொலன்நறுவை எனும் இடத்தினை சார்ந்தே இங்கு கொடுக்கப்படுகின்றது ஆனால் இங்கு பயிரிடப்படும் போகங்கள் வித்தியாசமானதாகும். பல நேரங்களில் போகம் முடியும் தருவாயில் பணம் கொடுக்கின்றார்கள். உரத்துக்கான கொடுப்பனவும் இவ்வாறே நிகழ்கின்றது. 

எமது மூலோபாய வாழ்வாதாரமான விவசாயம் மீன்பிடி கால்நடை இவை மூன்றுமே இங்கு பாரிய பிரச்சினை களை எதிர்நோக்குகின்றது என்பதையும் வலியுறுத்தியுள்ளேன்.

இதனால் எமது மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப் பின்னடைந்து காணப்படுகின்றது.

தேசிய ரீதியில் எடுத்துக்கொண்டால் எமது மக்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லாமையே இவ்வாறான சிக்கல்களையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எமக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்குமிடத்து வட கிழக்கை செழிப்புறும் பிரதேசமாக மாற்ற எம்மால் முடியும். மற்றும் எம்மால் எம் மக்களுக்கு தேவையான முடிவுகளை மேற்கொள்ள முடியும்.

வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும். எமது மக்களுக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்க சர்வதேச பலம் பொருந்திய நாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மற்றும் TRC - Truth, Unity and Reconciliation Commission உண்மைக்கும் ஒற்றுமைக்குமான நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக நிலை கால சட்டம் சம்பந்தமான விடயங்களிலும் அரசாங்கம் எம்மை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு வருகின்றது என்பதனையும் வலியுறுத்திக் கூறினேன். மற்றும் சமகால அரசியல் தொடர்பான பல விடையங்கள் ஆராயப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர்- சாணக்கியன் எம்.பி திடீர் சந்திப்பு. பிரித்தானிய  உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை சந்தித்துள்ளார். நேற்றையதினம் (29) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள போதே அவர் குறித்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் மேலும் தெரிவிக்கையில், குறித்த சந்திப்பின் போது  இதன்போது மாவட்ட மற்றும் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள்; நேரடியாக முகம் கொடுக்கும் பிரச்சினைகளான மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை. கனிய வளங்களான இல்மனைட் அகழ்வு இறால் வளர்ப்பு திட்டம் சம்பந்தமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் சட்டவிரோத காணி அபகரிப்பு சட்ட விரோதமான மீன்பிடி தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.அத்துடன் மேலும் அவர் மேலும் குறித்த பதிவில் தெரிவிக்கையில், மட்டக்களப்பு சார்ந்த விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விவசாய ஆரம்பக் கொடுப்பனவானது பொலன்நறுவை எனும் இடத்தினை சார்ந்தே இங்கு கொடுக்கப்படுகின்றது ஆனால் இங்கு பயிரிடப்படும் போகங்கள் வித்தியாசமானதாகும். பல நேரங்களில் போகம் முடியும் தருவாயில் பணம் கொடுக்கின்றார்கள். உரத்துக்கான கொடுப்பனவும் இவ்வாறே நிகழ்கின்றது. எமது மூலோபாய வாழ்வாதாரமான விவசாயம் மீன்பிடி கால்நடை இவை மூன்றுமே இங்கு பாரிய பிரச்சினை களை எதிர்நோக்குகின்றது என்பதையும் வலியுறுத்தியுள்ளேன். இதனால் எமது மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப் பின்னடைந்து காணப்படுகின்றது.தேசிய ரீதியில் எடுத்துக்கொண்டால் எமது மக்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லாமையே இவ்வாறான சிக்கல்களையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எமக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்குமிடத்து வட கிழக்கை செழிப்புறும் பிரதேசமாக மாற்ற எம்மால் முடியும். மற்றும் எம்மால் எம் மக்களுக்கு தேவையான முடிவுகளை மேற்கொள்ள முடியும். வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும். எமது மக்களுக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்க சர்வதேச பலம் பொருந்திய நாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.மற்றும் TRC - Truth, Unity and Reconciliation Commission உண்மைக்கும் ஒற்றுமைக்குமான நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக நிலை கால சட்டம் சம்பந்தமான விடயங்களிலும் அரசாங்கம் எம்மை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு வருகின்றது என்பதனையும் வலியுறுத்திக் கூறினேன். மற்றும் சமகால அரசியல் தொடர்பான பல விடையங்கள் ஆராயப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement