‘டித்வா’ காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரித்தானியாவின் துணைப் பிரதமர் டேவிட் லாமி (David Lammy) இலங்கையில் பல தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தினார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்றூ பற்றிக், துணை உயர்ஸ்தானிகர் மற்றும் மனிதாபிமான சேவையில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி, செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள், ‘விரித்தி’ (Vriddhi) பங்காளர்கள் மற்றும் UNOPS இன் இலங்கை பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
புயல் தாக்கத்திற்குப் பின்னர் சமூகங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளித்தன என்பதையும், அவசர உதவி மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன என்பதையும் இந்த சந்திப்பின் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், பிரித்தானிய அரசின் மனிதாபிமான நிதியுதவி, அவசர உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் வழங்கிய பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால திட்டங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயல் மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரித்தானிய துணைப் பிரதமர் ஆய்வு ‘டித்வா’ காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரித்தானியாவின் துணைப் பிரதமர் டேவிட் லாமி (David Lammy) இலங்கையில் பல தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தினார்.இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்றூ பற்றிக், துணை உயர்ஸ்தானிகர் மற்றும் மனிதாபிமான சேவையில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.அதன்படி, செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள், ‘விரித்தி’ (Vriddhi) பங்காளர்கள் மற்றும் UNOPS இன் இலங்கை பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.புயல் தாக்கத்திற்குப் பின்னர் சமூகங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளித்தன என்பதையும், அவசர உதவி மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன என்பதையும் இந்த சந்திப்பின் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.அத்துடன், பிரித்தானிய அரசின் மனிதாபிமான நிதியுதவி, அவசர உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் வழங்கிய பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால திட்டங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.