• Sep 13 2025

“City of Dreams” இன் நிகழ்வில் பொலிவுட் நட்சத்திரம் அர்ஜுன் ராம்பால்; புகைப்படங்கள் எடுக்க இரசிகர்களுக்கு வாய்ப்பு!

shanuja / Sep 13th 2025, 1:04 pm
image


ஆசியாவின் பிரம்மாண்டமான City of Dreams Sri Lanka வின் 'சிக்னேச்சர் க்லாம்' (Signature Glam) நிகழ்ச்சியில் பொலிவுட் நடிகரான அர்ஜுன் ராம்பால் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


City of Dreams Sri Lanka வின் 'சிக்னேச்சர் க்லாம்' நிகழ்ச்சயின் சிறப்பு விருந்தினராக 

கலந்துகொள்வதற்காக எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி, அர்ஜுன் ராம்பாலை வரவேற்க சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்கா அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.


'ராக் ஆன்', 'டான்', 'ஓம் சாந்தி ஓம்' மற்றும் 'ராஜ்நீதி' போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம், இந்தியா மற்றும் இலங்கையில் கவர்ந்துள்ள அன்பை வெளிப்படுத்தும் முகமாக அர்ஜுன் ராம்பால்  கலந்துகொள்ளவுள்ளார். 


தெற்காசிய திரைப்படங்கள், ஆடை நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்காக அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்பும் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளது.


அத்துடன் 2023 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்வேதா ஷர்தா, செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார். 


கொழும்பின் ஆடம்பரமான இடத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்கா, தெற்காசியாவின் முன்னணி ஆடம்பர சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. 


குறிப்பாக, அதிக வருமானம் ஈட்டும் இந்திய சுற்றுலாப் பயணிகள், செல்வாக்குமிக்க பிரபலங்கள் மற்றும் அனுபவங்களை விரும்பும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இந்த நிகழ்ச்சிகள், இந்தியர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதோடு, இலங்கை மற்றும் இந்தியாவின் கலாச்சார மற்றும் படைப்பாற்றல் உறவுகளையும் வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“City of Dreams” இன் நிகழ்வில் பொலிவுட் நட்சத்திரம் அர்ஜுன் ராம்பால்; புகைப்படங்கள் எடுக்க இரசிகர்களுக்கு வாய்ப்பு ஆசியாவின் பிரம்மாண்டமான City of Dreams Sri Lanka வின் 'சிக்னேச்சர் க்லாம்' (Signature Glam) நிகழ்ச்சியில் பொலிவுட் நடிகரான அர்ஜுன் ராம்பால் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. City of Dreams Sri Lanka வின் 'சிக்னேச்சர் க்லாம்' நிகழ்ச்சயின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி, அர்ஜுன் ராம்பாலை வரவேற்க சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்கா அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.'ராக் ஆன்', 'டான்', 'ஓம் சாந்தி ஓம்' மற்றும் 'ராஜ்நீதி' போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம், இந்தியா மற்றும் இலங்கையில் கவர்ந்துள்ள அன்பை வெளிப்படுத்தும் முகமாக அர்ஜுன் ராம்பால்  கலந்துகொள்ளவுள்ளார். தெற்காசிய திரைப்படங்கள், ஆடை நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்காக அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்பும் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளது.அத்துடன் 2023 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்வேதா ஷர்தா, செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார். கொழும்பின் ஆடம்பரமான இடத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்கா, தெற்காசியாவின் முன்னணி ஆடம்பர சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அதிக வருமானம் ஈட்டும் இந்திய சுற்றுலாப் பயணிகள், செல்வாக்குமிக்க பிரபலங்கள் மற்றும் அனுபவங்களை விரும்பும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள், இந்தியர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதோடு, இலங்கை மற்றும் இந்தியாவின் கலாச்சார மற்றும் படைப்பாற்றல் உறவுகளையும் வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement