• May 23 2026

ஐரோப்பாவில் மீண்டும் தீவிரம் பெறும், பறவைக் காய்ச்சல்.

dorin / Oct 25th 2025, 8:51 pm
image

ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சல் (Avian Influenza) மீண்டும் வேகமாகப் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்று அதிகமான நாடுகள் தொடக்கத்திலேயே

பாதிப்பு பதிவுசெய்தது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடம்பெயரும் காட்டுப் பறவைகள் மூலம் பரவும் இந்த நோய், ஆகஸ்ட் முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை பிரித்தானியா மற்றும் 10 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மொத்தம் 56 பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலானவை போலந்தில் பதிவாகியுள்ளன.

2022ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதும் மிக மோசமான நிலையை எதிர்கொண்டது. அப்போது மொத்தம் 9 நாடுகளில் 31 பாதிப்புகள் பதிவாகியிருந்தன.ஆனால், தற்போது 10 நாடுகளில் தொடக்கத்திலேயே பரவல் பதிவாகியுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 2022 உடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

இந்த வாரம் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் புதியதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல் பிரான்சில் மேலும் இரண்டு சம்பவங்கள் வெளிப்பட்டுள்ளன.

ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான அபாயம் குறைவாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடி தொடர்பு கொண்ட சிலருக்கே இதுவரை தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ், பண்ணை வாத்துகளுக்கான மூன்றாவது வருடாந்திர தடுப்பூசி திட்டத்தை தொடங்கியுள்ளது. இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஆசியா நாடுகளிலும் பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை 180 மில்லியனுக்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டுள்ளன.

இதன் விளைவாக முட்டை விலை உயர்வு ஏற்பட்டதுடன், சில கறவை மாடுகள் மற்றும் மனிதர்களிலும் பாதிப்பு பதிவாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கோழி இறைச்சி ஏற்றுமதியாளரான பிரேசில்,

கடந்த காலங்களில் பறவைக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும்,

தற்போது பறவைக் காய்ச்சல் இல்லாத நாடு என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் மீண்டும் தீவிரம் பெறும், பறவைக் காய்ச்சல். ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சல் (Avian Influenza) மீண்டும் வேகமாகப் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்று அதிகமான நாடுகள் தொடக்கத்திலேயே பாதிப்பு பதிவுசெய்தது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இடம்பெயரும் காட்டுப் பறவைகள் மூலம் பரவும் இந்த நோய், ஆகஸ்ட் முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை பிரித்தானியா மற்றும் 10 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மொத்தம் 56 பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலானவை போலந்தில் பதிவாகியுள்ளன.2022ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதும் மிக மோசமான நிலையை எதிர்கொண்டது. அப்போது மொத்தம் 9 நாடுகளில் 31 பாதிப்புகள் பதிவாகியிருந்தன.ஆனால், தற்போது 10 நாடுகளில் தொடக்கத்திலேயே பரவல் பதிவாகியுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 2022 உடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.இந்த வாரம் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் புதியதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் பிரான்சில் மேலும் இரண்டு சம்பவங்கள் வெளிப்பட்டுள்ளன. ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான அபாயம் குறைவாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடி தொடர்பு கொண்ட சிலருக்கே இதுவரை தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.பிரான்ஸ், பண்ணை வாத்துகளுக்கான மூன்றாவது வருடாந்திர தடுப்பூசி திட்டத்தை தொடங்கியுள்ளது. இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஆசியா நாடுகளிலும் பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது.அமெரிக்காவில் இதுவரை 180 மில்லியனுக்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. இதன் விளைவாக முட்டை விலை உயர்வு ஏற்பட்டதுடன், சில கறவை மாடுகள் மற்றும் மனிதர்களிலும் பாதிப்பு பதிவாகியுள்ளது.உலகின் மிகப்பெரிய கோழி இறைச்சி ஏற்றுமதியாளரான பிரேசில், கடந்த காலங்களில் பறவைக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது பறவைக் காய்ச்சல் இல்லாத நாடு என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement