திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட "பிரஜா சக்தி "சமூக அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (07) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபரும் ( காணி) ,தம்பலகாமம் பதில் பிரதேச செயலாளருமான ஜெய கௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றுள்ளது.
பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான இந்தப் பயிற்சிப் பட்டறை, சமூக வளர்ச்சி, பொருளாதார சுயநிலை, அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நடைமுறை செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
அரசின் புதிய கொள்கைத் திட்டங்கள் ஊடாக கிராமிய அபிவிருத்தி தொடர்பில் கூட்டினைந்த முடிவுகளுடன் அபிவிருத்திகளை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பிலும் விழிப்பூட்டப்பட்டது. இதன் மூலம் கிராமங்களை வலுப்படுத்தவும் ஒரு உத்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வின் வளவாளர்களாக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எஸ்.எம். றியாத் ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.லங்கா பட்ம ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பிரஜா சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
“பிரஜா சக்தி” சமூக அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட "பிரஜா சக்தி "சமூக அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (07) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வு திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபரும் ( காணி) ,தம்பலகாமம் பதில் பிரதேச செயலாளருமான ஜெய கௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றுள்ளது.பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான இந்தப் பயிற்சிப் பட்டறை, சமூக வளர்ச்சி, பொருளாதார சுயநிலை, அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நடைமுறை செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அரசின் புதிய கொள்கைத் திட்டங்கள் ஊடாக கிராமிய அபிவிருத்தி தொடர்பில் கூட்டினைந்த முடிவுகளுடன் அபிவிருத்திகளை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பிலும் விழிப்பூட்டப்பட்டது. இதன் மூலம் கிராமங்களை வலுப்படுத்தவும் ஒரு உத்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.குறித்த நிகழ்வின் வளவாளர்களாக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எஸ்.எம். றியாத் ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.லங்கா பட்ம ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பிரஜா சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.