• Apr 20 2026

அமெரிக்காவின் முக்கிய கடற்படைத் தளம் மீது தாக்குதல் - எதிரிகளை திணறடிக்கும் ஈரானிய ஏவுகணைகள்!

shanu / Mar 21st 2026, 8:43 pm
image

எதிரிகள் நினைத்ததை விட அதிக தூரம் பாயும்  அளவில் ஈரானிய ஏவுகணைகள் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. 


சாகோஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அந்நாட்டின்  அரசு செய்தி நிறுவனமான 'மெஹர்' இன்று (21) உறுதிப்படுத்தியுள்ளது.


"இது ஒரு குறிப்பிடத்தக்க தாக்குதல். ஈரானிய ஏவுகணைகளின் எல்லை எதிரி முன்னதாகக் கணித்ததை விட அதிகமானது என்பதை இது குறிக்கிறது" என்று அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படைத் தளமாக டியாகோ கார்சியா தளம் கருதப்படுகிறது. 


இந்தத் தளத்தின் மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், எனினும் இதனால் தமது தளத்திற்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. 


இலங்கை கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்காவினால் 'ஐரிஸ் டெனா' (Iris Dena) போர்க்கப்பல் மீது டார்பிடோ தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல், இந்தத் தீவிலிருந்தே வந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் முக்கிய கடற்படைத் தளம் மீது தாக்குதல் - எதிரிகளை திணறடிக்கும் ஈரானிய ஏவுகணைகள் எதிரிகள் நினைத்ததை விட அதிக தூரம் பாயும்  அளவில் ஈரானிய ஏவுகணைகள் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. சாகோஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அந்நாட்டின்  அரசு செய்தி நிறுவனமான 'மெஹர்' இன்று (21) உறுதிப்படுத்தியுள்ளது."இது ஒரு குறிப்பிடத்தக்க தாக்குதல். ஈரானிய ஏவுகணைகளின் எல்லை எதிரி முன்னதாகக் கணித்ததை விட அதிகமானது என்பதை இது குறிக்கிறது" என்று அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படைத் தளமாக டியாகோ கார்சியா தளம் கருதப்படுகிறது. இந்தத் தளத்தின் மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், எனினும் இதனால் தமது தளத்திற்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்காவினால் 'ஐரிஸ் டெனா' (Iris Dena) போர்க்கப்பல் மீது டார்பிடோ தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல், இந்தத் தீவிலிருந்தே வந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement