• Oct 06 2026

பெக்கோ சமனுடன் தொடர்புடையதாக கூறப்படும் ரூ.40 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்

Aathira / Oct 5th 2026, 6:43 pm
image

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்கவுக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படும் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்க பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான உத்தரவு ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்களில் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதிசொகுசு பென்ஸ் ரக கார் ஒன்றும், இரண்டு தனியார் வங்கிகளில் பராமரிக்கப்படும் தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு நிலையான வைப்புக் கணக்குகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் நிமந்தி பொன்சேகா என்ற பெண்ணின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ. விக்ரமசேகரவின் மேற்பார்வையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெக்கோ சமனுடன் தொடர்புடையதாக கூறப்படும் ரூ.40 மில்லியன் சொத்துக்கள் முடக்கம் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்கவுக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படும் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்க பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கான உத்தரவு ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முடக்கப்பட்ட சொத்துக்களில் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதிசொகுசு பென்ஸ் ரக கார் ஒன்றும், இரண்டு தனியார் வங்கிகளில் பராமரிக்கப்படும் தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு நிலையான வைப்புக் கணக்குகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சொத்துக்கள் நிமந்தி பொன்சேகா என்ற பெண்ணின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ. விக்ரமசேகரவின் மேற்பார்வையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement