• Sep 05 2026

செயற்கை நுண்ணறிவு மோப்பக் கருவி கண்டுபிடிப்பு-உலக கவனம் ஈர்த்த10 வயதில் சிறுவன்

Ziya / Sep 5th 2026, 3:27 pm
image


விமான நிலைய பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “Novel Artificial Electronic Nose” எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மோப்பக் கருவியை உருவாக்கிய 10 வயது தைவான் சிறுவன் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார்.


கங் சியாவோ சர்வதேச பள்ளியில் பயிலும் சு ஹ்சு டிங்-வேய் (Hsu Ting-wei), நிகழ்நேர காற்று மாதிரி சேகரிப்பு அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வாசனை அங்கீகார தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளார்.


விமான நிலையங்களில் X-Ray ஸ்கேனர்களுக்குப் பின்னால் பொருத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், அபாயகரமான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வாசனை மூலம் கண்டறிய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலைப் பரப்பக்கூடிய பன்றி இறைச்சிப் பொருட்களையும் அடையாளம் காணும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.


10 வயதிலேயே உருவாக்கப்பட்ட இந்த புதுமையான கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற சிலிகான் வேலி சர்வதேச விழாவில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும், சர்வதேச கண்டுபிடிப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சிறந்த கண்டுபிடிப்புக்கான உயரிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிறுவனின் இந்த முயற்சி, சிறு வயதிலேயே செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்தும் இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மோப்பக் கருவி கண்டுபிடிப்பு-உலக கவனம் ஈர்த்த10 வயதில் சிறுவன் விமான நிலைய பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “Novel Artificial Electronic Nose” எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மோப்பக் கருவியை உருவாக்கிய 10 வயது தைவான் சிறுவன் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார்.கங் சியாவோ சர்வதேச பள்ளியில் பயிலும் சு ஹ்சு டிங்-வேய் (Hsu Ting-wei), நிகழ்நேர காற்று மாதிரி சேகரிப்பு அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வாசனை அங்கீகார தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளார்.விமான நிலையங்களில் X-Ray ஸ்கேனர்களுக்குப் பின்னால் பொருத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், அபாயகரமான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வாசனை மூலம் கண்டறிய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலைப் பரப்பக்கூடிய பன்றி இறைச்சிப் பொருட்களையும் அடையாளம் காணும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.10 வயதிலேயே உருவாக்கப்பட்ட இந்த புதுமையான கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற சிலிகான் வேலி சர்வதேச விழாவில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச கண்டுபிடிப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சிறந்த கண்டுபிடிப்புக்கான உயரிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சிறுவனின் இந்த முயற்சி, சிறு வயதிலேயே செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்தும் இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement