• May 23 2026

மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு அநுர அரசே காரணம்! சாமர சம்பத் விமர்சனம்

Chithra / Sep 24th 2025, 9:55 am
image

மின்சாரசபை மறுசீரமைப்பு செய்யும் புதிய சட்டமூலம் தொடர்பில் அரசாங்கம் மின்சாரசபை தொழிற்சங்கங்களுடன்  கலந்துரையாடி அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதனை பாராளுமன்றத்தில் தெரிவித்து பிரயோசனம் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமரசம்பத் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கம் செயற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சாரசபை தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதனால் மின்சார சபையில் மேற்கொள்ளப்போகும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் எங்களுக்கு தெரிவிக்காமல், அதனை மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கு விளக்கமளித்து பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

கடந்த காலங்களில் மின்சார சபையில் மாற்றங்களை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்  காஞ்சன விஜேசேகர  நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு  கடும் எதிர்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு தற்போது அரசாங்கமும் சம்பந்தப்பட்டிருந்தது.  என்றார்.

மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு அநுர அரசே காரணம் சாமர சம்பத் விமர்சனம் மின்சாரசபை மறுசீரமைப்பு செய்யும் புதிய சட்டமூலம் தொடர்பில் அரசாங்கம் மின்சாரசபை தொழிற்சங்கங்களுடன்  கலந்துரையாடி அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதனை பாராளுமன்றத்தில் தெரிவித்து பிரயோசனம் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமரசம்பத் தெரிவித்தார்பாராளுமன்றத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கம் செயற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சாரசபை தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதனால் மின்சார சபையில் மேற்கொள்ளப்போகும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் எங்களுக்கு தெரிவிக்காமல், அதனை மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கு விளக்கமளித்து பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடந்த காலங்களில் மின்சார சபையில் மாற்றங்களை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்  காஞ்சன விஜேசேகர  நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு  கடும் எதிர்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு தற்போது அரசாங்கமும் சம்பந்தப்பட்டிருந்தது.  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement