• May 10 2026

2025 ஜனாதிபதி சுற்றாடல் விருதுகளை வழங்கிவைத்த அநுர; அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு வெண்கல பதக்கம்

Chithra / Oct 23rd 2025, 7:58 pm
image

இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு  கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் திட்டம் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையால் வடிவமைக்கப்பட்டு 2011  ஆம்ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு , ' அழகான நாடு - புன்னகைக்கும் மக்கள்' என்ற நோக்குடன் செயல்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். 


'சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில் பிரிவு', 'சுற்றுச்சூழலுக்கு உகந்த அரச நிறுவன பிரிவு', 'சுற்றுச்சூழலுக்கு உகந்த தனியார் துறை பிரிவு ', 'சுற்றுச்சூழலுக்கு உகந்த பாடசாலைகள்', 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்ட பிரிவு', 'சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தாக்கப் பிரிவு', 'சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படும் அரச சார்பற்ற நிறுவன பிரிவு', 'ஊடக பிரிவு' மற்றும் 'சமூக ஊடக பிரிவு ' ஆகிய 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுக்கான வெண்கல பதக்கம் இவ்வாண்டு கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலத்திற்கு கிடைத்துள்ளது.


கடந்த காலங்களில் இதே துறையில் இப்பாடசாலை மெரிட் சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட நிலையில் இவ்வாண்டு விருது கிடைத்துள்ளது. 


2025 ஜனாதிபதி சுற்றாடல் விருதுகளை வழங்கிவைத்த அநுர; அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு வெண்கல பதக்கம் இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு  கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் திட்டம் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையால் வடிவமைக்கப்பட்டு 2011  ஆம்ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு , ' அழகான நாடு - புன்னகைக்கும் மக்கள்' என்ற நோக்குடன் செயல்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். 'சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில் பிரிவு', 'சுற்றுச்சூழலுக்கு உகந்த அரச நிறுவன பிரிவு', 'சுற்றுச்சூழலுக்கு உகந்த தனியார் துறை பிரிவு ', 'சுற்றுச்சூழலுக்கு உகந்த பாடசாலைகள்', 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்ட பிரிவு', 'சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தாக்கப் பிரிவு', 'சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படும் அரச சார்பற்ற நிறுவன பிரிவு', 'ஊடக பிரிவு' மற்றும் 'சமூக ஊடக பிரிவு ' ஆகிய 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன.இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுக்கான வெண்கல பதக்கம் இவ்வாண்டு கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலத்திற்கு கிடைத்துள்ளது.கடந்த காலங்களில் இதே துறையில் இப்பாடசாலை மெரிட் சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட நிலையில் இவ்வாண்டு விருது கிடைத்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement