குருநாகல் வீதியில் தனித்து நின்ற வயோதிப பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று விடும் பணியில் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தம்மிட பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 90 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
படல்கம காசிவத்த பகுதியில் குறித்த பெண் சுற்றித் திரிந்த போது பிரதேசவாசிகள் அவர் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் படல்கம பொலிஸ் அதிகாரிகள் வந்து பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தனர்.
கேகாலை பிரதேசத்தில் இருந்து தான் அந்தப் பகுதிக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, அந்த பெண்ணை அவரது வீட்டில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த மூதாட்டி கடந்த சில நாட்களாகக் காணாமல் போயுள்ளதாகவும் அவரது உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும், அவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வீதியில் அலைந்து திரிந்த வயோதிபப் பெண்; பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரின் நெகிழ்ச்சி செயல் குருநாகல் வீதியில் தனித்து நின்ற வயோதிப பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று விடும் பணியில் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.தம்மிட பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 90 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.படல்கம காசிவத்த பகுதியில் குறித்த பெண் சுற்றித் திரிந்த போது பிரதேசவாசிகள் அவர் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.பின்னர் படல்கம பொலிஸ் அதிகாரிகள் வந்து பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தனர்.கேகாலை பிரதேசத்தில் இருந்து தான் அந்தப் பகுதிக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, அந்த பெண்ணை அவரது வீட்டில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்த மூதாட்டி கடந்த சில நாட்களாகக் காணாமல் போயுள்ளதாகவும் அவரது உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும், அவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.